இத்தாலி தீவில் தனியாக 32 ஆண்டுகள் வாழ்ந்த தாத்தா!

Date:

இத்தாலியில் உள்ள தனித்தீவு ஒன்றில், கடந்த 32 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்த தாத்தா ஒருவர், அதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக தற்போது தீவை விட்டு வெளியேறினார்.

இத்தாலி நாட்டை சேர்ந்தவர் ராபின்சன் குரூசோ. இவர் கடந்த 1989 ஆம் ஆண்டு இத்தாலி கடற்பகுதியில், தனது நண்பர்களுடன் இணைந்து கடற்பயணம் மேற்கொண்ட போது, புடெல்லி தீவு சென்றிருக்கிறார். அது இளஞ்சிவப்பு மணலை கொண்ட அழகிய தீவாக இருந்திருக்கிறது. அப்போது அந்த தீவை பாதுகாக்க ஆள் தேவை என்ற தகவலை தெரிந்து கொண்ட ராபின்சன், அதற்கு முன்வந்து, தீவை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

அதற்கு பின் ராபின்சன், மவுரோ மொராண்டி என அழைக்கப்பட்டார். அவருடன் வந்த அவரது நண்பர்கள் தீவை விட்டு வெளியேற, தான் மட்டும் தனி ஆளாக அங்கு தங்கி, தீவை பாதுகாத்து வந்தார். இவ்வாறு கடந்த 32 ஆண்டுகளாக பாதுகாத்த வந்த அவர், கடற்கரைகளை அழகாக வைத்து கொள்வது, தீவுக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம், தீவின் அருமை, பெறுமைகளை கூறுவது என மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், மவுரோவை தீவை விட்டு வெளியேற வேண்டும் என, தீவை நிர்வகித்து வரும் அதிகாரிகள் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு அழுத்தம் கொடுத்து வந்திருக்கின்றனர். ஒருகட்டத்தில் அவரும் வேதனையுடன் வெளியேற சம்மதம் தெரிவித்து விட்டார். 32 ஆண்டுகளுக்கு பின், அவர் தீவை விட்டு வெளியேறி உள்ளார்.

இதுகுறித்து மவுரோ கூறுகையில், ‘‘புடெல்லியை கடந்த 32 ஆண்டுகளாக பாதுகாத்து விட்டேன். எதிர்காலத்திலும் அது சிறப்பாக பாதுகாக்கப்படும் என நான் நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்