வடமாகாணத்தில் சுகாதாரத் தொண்டர்களாக பணியாற்றிய 388 பேரையும், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குள் உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தல், ஜனாதிபதி செயலகத்தினால், பல்நோக்கு செயலணி திணைக்களத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார தொண்டர்களிற்கு நிரந்தர நியமனம் வழங்கும் முகமாக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வு குறித்து சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, அவர்களின் நியமனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அவர்கள் ஆளுனர் செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கக அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1