இந்துக்களின் சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி ரத்து.;உத்தரகண்ட் அரசு அதிரடி அறிவிப்பு!

Date:

கொரோனா நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சார் தாம் யாத்திரையை இடைநிறுத்த உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கு கோவில்களின் பூசாரிகள் மட்டுமே சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வார்கள் என்று முதல்வர் தீரத் சிங் ராவத் கூறினார். இந்த யாத்திரை மே 14 முதல் தொடங்க திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சார் தாம் என்பது பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு யாத்திரை செல்லும் நிகழ்வாகும்.இவை உத்தரகண்டின் கர்வால் பகுதியில் அமைந்துள்ளன.

யாத்ரீகர்களை பதிவு செய்வதற்கும் வருகை தருவதற்கும் வரைவு தரநிலை இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) மாநில அரசு முன்பு தயாரித்திருந்தது. எனினும் நிலைமையை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்ததால் வரைவு பகிரங்கப்படுத்தப்படவில்லை.

முன்னதாக, நாடு முழுவதும் கொரோனா அலை வேகமெடுக்க ஆரம்பித்த நிலையில், உத்தரகண்டில் நடந்த கும்பமேளா குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் தீவிரம் மிக அதிக அளவில் உள்ளதால், உத்தரகண்ட் அரசு சார் தாம் யாத்திரைக்குத் தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், மாநிலத்தில் சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் 1’ஆம் தேதி 2,236 எனும் அளவில் இருந்த நிலையில் நேற்று, 45,383’ஆக உயர்ந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்காவின் பி-52 குண்டுவீச்சு விமானம் விபத்து: 8 பேர் பலியாகியிருக்கலாமென அச்சம்!

கலிபோர்னியாவில் திங்களன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஒரு பி-52 ரக குண்டுவீச்சு...

சூரியவன்ஷிக்கு முன்னாள் இலங்கை கப்டன் வழங்கிய ஆலோசனை

முன்னாள் இலங்கை கப்டன் அனுர தென்னக்கோன், இந்திய இளம் நட்சத்திர வீரர்...

தென்மாகாண முன்னாள் முதல்வரின் தனிப்பட்ட செயலாளர் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவின் தனிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்