மேலும் 6 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 6 மரணங்கள் இன்று (28) பதிவாகியுள்ளன .

மரணங்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளது.

மரணங்களின் விபரம்-

பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த, 56 வயதான ஆண் ஒருவர், மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரபொகுண பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதான பெண் ஒருவர், சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (27) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, குருதி விஷமடைவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் இன்று (28) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த, 65 வயதான பெண் ஒருவர், மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொத்தலாவல பாதுகாப்பு வைத்திய பீட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட வேளையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமான இருதய நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த, 66 வயதான ஆண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்ட நுரையீரல் தொற்று என அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த, 69 வயதான ஆண் ஒருவர், வெலிசறை காசநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (27) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்