07 வயது பிள்ளையை கொடூரமாக தாக்கிய தாயும், பாட்டியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனின் தாய் மற்றும் பாட்டி ஆகியோரை பல்லேவெல பொலிசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
நான்கு குழந்தைகளைக் கொண்ட இந்த குடும்பம் கணேகொட பகுதியில் வசிக்கிறார்கள்.
விகாரையில் தங்கியிருந்து படித்த 16, 9, 7 வயது பிள்ளைகள் வீடு திரும்பிய போது, 7 வயது பிள்ளை தனது பாட்டியை வணங்கவில்லையென கூறி தாயாரால் தாக்கப்பட்டுள்ளார்.
13 வயதான பிள்ளை இந்த சம்பவத்தை வீடீயோ பதிவு செய்திருந்தார்.
காயமடைந்த பிள்ளையிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று மருத்துவ பரிசோதனைக்கு ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பல்லேவெல போலீசார் தெரிவித்தனர்.
https://youtu.be/YNrH_tIzqQI



