இந்தியாவில் காணப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் 17 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை தொட்டு வருகிறது. உலக அளவில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருக்கிறது.
இந்தியாவில் இந்த புயல்வேக கொரோனா வைரஸ் பரவலுக்கு இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் (பி.1.617) காரணமாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் 17க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு சராசரியாக 3.50 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.