நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலிருந்தே அதிக எண்ணிக்கையிலானவர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று, கொழும்பு மாவட்டத்திலிருந்து 200 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் 1,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் நேற்று இலங்கையில் பதிவாகினர்.. நேற்று 1,111 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
கொழும்பிற்கு அடுத்ததாக கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகினர். அங்கு, 198 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 119 பேரும், காலி மாவட்டத்தில் 86 பெரும், கண்டி மாவட்டத்தில் 74 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 70 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 55 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 41 பேரும், மாதத்தறை மாவட்டத்தில் 38 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 37 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 32 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 28 பேரும், பதுளை மாவட்டத்தில் 20 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 17 பேரும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து தலா 15 பேரும், 15 வெளிநாட்டிலிருந்து வந்த 15 பேரும், கேகாலை மாவட்டத்தில் இருந்து 14 பேரும், யாழ் மாவட்டத்தில் இருந்து 9 பேர், புத்தளம், மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தலா 8 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 7 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 3 பேர், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.




