முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அம்பகாமம் மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் 26.04.2021 மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் கிராமத்தில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கின்ற விநாயகப் பெருமானுடைய வருடாந்த உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
சித்திரா பௌர்ணமி தினத்திலே ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் உடைய வருடாந்த உட்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இம்முறையும் இந்த ஆலயத்தின் உடைய வருடாந்த உற்சவம் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு குறிப்பிட்ட பக்தர்களோடு சிறப்பாக இடம்பெற்றது.
அடியவர்களின் காவடிகள் பால் சொம்பு தூக்கு காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன் களை பக்தர்கள் மேற்கொண்டிருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது குறிப்பாக போலிசார் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றி இந்த ஆலய உற்சவம் அமைதியான முறையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.