27 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

திருமண நிகழ்வில் பிபிஇ கிட் உடை அணிந்து டான்ஸ் ஆடிய ஆம்புலன்ஸ் டிரைவர்! வைரல் வீடியோ

உத்திரகண்டில் நடந்த திருமணம் ஒன்றில், மணமக்கள் மற்றும் சுற்றி இருப்பவர்களை உற்சாகப்படுத்த, கொரோனா கவச உடை அணிந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் அட்டகாசமாக டான்ஸ் ஆடினார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றன. அப்படி கட்டுப்பாடுகளுடன் அமைதியாக நடந்த ஒரு திருமணத்தை, ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் டான்ஸ் ஆடி குதூகலிப்பை ஏற்படுத்தும் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

இந்த சம்பவம், உத்திரகண்ட் மாநிலத்தில், கடந்த திங்கள்கிழமை இரவு சுஷிலா திவாரி மருத்துவக் கல்லூரிக்கு வெளியே டெஹ்ராடூனில் இருந்து 280 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஹல்ட்வானி என்ற நகரத்தில் நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருமண நிகழ்வில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகளுடன் அந்த திருமணம் அமைதியாக நடந்திருக்கிறது.

அப்போது, கொரோனா ஆம்புலன்ஸ் டிரைவரான மகேஷ் என்பவர், பிபிஇ கிட் அணிந்து கொண்டு, திருமண ஊர்வலத்தின் முன் உற்சாகமாக நடனமாட துவங்கினார். தனது பணி நெருக்கடி காரணமாக, ஊழியர்கள் ஒவ்வொருவரும் 18 மணி நேரம் வேலை செய்து வரும் நிலையில், தன்னை அவர் புத்துணர்ச்சியாக்கவும் இந்த நடனம் அவருக்கு உதவி செய்திருக்கும். இவர் நடனமாட துவங்கியதும், சுற்றி இருந்தவர்களும் நடனமாக அந்த இடம் அப்போது தான் களை கட்டியது. இந்நிலையில், அவர் நடனமாடும் வீடியோ நெட்டிசன்களை கவர, அது வைரலாகியது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment