யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.
இந்த ஆலயத்தில் திருவிழா இடம்பெற்ற புகைப்படங்கள் இன்று கொழும்பு சிங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1