சாய்ந்தமருதில் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு

Date:

நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா மூன்றாம் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி .சுகுணன் தலைமையில் இன்று (27) சுகாதார சுற்றிவளைப்பொன்று கல்முனை மாநகரில் நடைபெற்றது.

அதன் ஒரு கட்டமாக சாய்ந்தமருதில் நடைபெற்ற திடீர் சுகாதார சுற்றிவளைப்பில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள், வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாத், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கல்முனை பொலிஸார், பாதுகாப்பு படை அதிகாரிகள், சுகாதார துறை ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்த இந்த சுற்றிவளைப்பின் போது சுகாதார வழிமுறைகளை பேணாதோர், முகக்கவசம் அணியாதோர் என பலரும் நிறுத்தப்பட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

மேலும் மக்கள் நெரிசலாக கூடுவதை எவ்வாறு தவிர்க்கச் செய்வது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, பொது மக்களும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு விதிகள் குறித்து இங்கு வர்தகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்