அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஹைதராபாத் வந்த நயன்தாரா!

Date:

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் ஹைதராபாத் வந்த நயன்தாராவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இதுக்கு கீர்த்தி சுரேஷ் பரவாயில்லை என்கிறார்கள்.கொரோனா வைரஸ் பிரச்சனை எல்லாம் ஏற்படுவதற்கு முன்பே துவங்கப்பட்டது தான் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு. கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு இரண்டு முறை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கி வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் இன்று ஹைதராபாத்துக்கு வந்தார் நயன்தாரா. அவர் விமானத்தில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள். அதற்கு காரணம் நயன்தாரா ஒல்லிக்குச்சியாக இருப்பது தான். அவரின் கால்கள் என்ன இப்படி குச்சி, குச்சியாக இருக்கிறது என்று வியந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

முன்னதாக கொச்சியில் விஷூ பண்டிகையை கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தும் ரசிகர்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்தார்கள். யோவ் அன்பான இயக்குநரே, தலைவிக்கு சோறு போடுகிறீர்களா இல்லையா, நாளுக்கு நாள் ஒல்லியாகிக் கொண்டே இருக்கிறாரே என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் கேட்டார்கள்.

பூசினாற் போன்று இருந்த கீர்த்தி சுரேஷ் எலும்பும் தோலுமாகிவிட்டார். ஆனால் நயன்தாராவை பார்த்தால் கீர்த்தி சுரேஷ் எவ்வளவோ பரவாயில்லை போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

கொச்சிக்கு சென்ற நயன்தாரா தன் அம்மாவுடன் நேரம் செலவிட்டார். அம்மா கையால் சாப்பிட்ட தெம்புடன் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார். அண்ணாத்த படத்தை நவம்பர் 4ம் தேதி ரிலீஸ் செய்வோம் என்று அறிவித்தார்கள். அதனால் தான் கொரோனா வைரஸ் பிரச்சனைக்கு இடையேயும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.

அண்ணாத்த படத்தில் நயன்தாரா தவிர்த்து கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், அர்ஜய் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

சேதி தெரியுமா?: கொரோனா 2வது அலை குறித்து அன்றே சொன்ன ரஜினி
இதற்கிடையே கொரோனா இரண்டாம் அலை குறித்து அன்றே சொன்ன ரஜினி என்று அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து...

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்