நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், முன்பள்ளிகள் அனைத்தும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய கல்வி அமைச்சர், மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்து, பாடசாலைகள் தொடர்பான அனைத்து முடிவுகளும் எட்டப்படும் என்றார்.
அடுத்த வாரம் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடி வார இறுதியில் ஒரு முடிவு எட்டப்படும் என்று அமைச்சர் கூறினார்.
பாடசாலைகள் மூடப்படும் முடிவை மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எடுத்ததாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில் நாட்டின் அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1