விளையாட்டு பாடசாலைகளுக்காக இந்த வருடத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை மற்றும் செயல் முறை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் இந்த பரீட்சைகள் ஆரம்பமாகவிருந்தன. நாட்டில் நிலவும் கொரோனா வைரசு தொற்று பரவலையடுத்து இந்த பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.




