மேலும் 3 மரணங்கள்!

Date:

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் நேற்று (26) பதிவாகியுள்ளன.இதன்படி, இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 647 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்,

கல்பாத்த பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த, 92 வயதான ஆண் ஒருவர், IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (25) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நிமோனியா, உக்கிர சிறுநீரக சிதைவு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த, 70 வயதான பெண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மாலபே நெவில் பெனாண்டோ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (26) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், உக்கிர கொவிட்-19 நிமோனியாவுடன் ஏற்பட்ட சிக்கலான நிலை காரணமான இருதய மற்றும் சுவாச செயற்பாடு செயலிழப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்