கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட ஒவ்வாமை: நடிகர் பார்த்திபன் பகிர்ந்துள்ள விழிப்புணர்வு பதிவு!

Date:

கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்வதால் ஒரு சிலருக்கு காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்படலாம். ஆனாலும் கொரோனா தடுப்பூசி முக்கியம் என தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.

நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவிற்கு பலவித இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மீதும் மக்கள் முழுவதுமாக நம்பிக்கை செலுத்தவில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டதால் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாக கூறியிருந்த பார்த்திபன், அது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட பார்த்திபன், தேர்தலுக்கு வாக்களிக்க வரவில்லை. இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையால் கண் காது முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கான இரண்டாம் டோஸ் போட்டு கொண்ட பார்த்திபன் அதனால் தனக்கு காய்ச்சல், உடம்பு வலி, ஒவ்வாமை போன்றவை ஏற்பட்டிருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

இதனை தொடர்ந்து, தனது மகள் கீர்த்தனா கூறியதாக ஒருசில கருத்துகளையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் , என் அன்பு மகள் கீர்த்தனா இத்த’தகவலை’ பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை! ஒவ்வாமை (allergy)சில சமயங்களில் உணவு,ஒப்பனை,அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு.பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும்.இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது. எனவே தடுப்பூசி அவசியமானது. but ஜூரம், உடல் வலி போன்ற ஒரு reaction வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி! என பதிவு செய்துள்ளார்.

பார்த்திபன் தற்போது தன்னுடைய ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக சிங்கிள் ஷாட் திரைப்பபடமாக எடுக்கப்பட உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இருவரும் முதன்முதலாக இந்த திரைப்படத்தில் இணைகின்றனர். பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் சமீபத்தில் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்