புகையிரத விபத்தில் யுவதி பலி!

Date:

ஜா எல, குடககபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்தார். காதலன் படுகாயமடைந்துள்ளார்.

23 ஆம் திகதி புகையிரத கடவையொன்றில் இந்த விபத்து நேர்ந்தது.

அந்த யுவதி பணி முடிந்ததும், அண்மையில் தனது காதலனுடன் வீடு திரும்பிய போது, புகையிரதத்தில் மோதி விபத்திற்குள்ளாகினர்.

இதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காதலன் படுகாயமடைந்தார்.

ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த யுவதி இரவு 8 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி விபத்துக்குள்ளானார். பலத்த காயமடைந்த இளைஞர் ராகம மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீதுவவை சேர்ந்த கே.இரேஷா ருமேஷிகா (21). என்பவரே உயிரிழந்தார்.  நாமல் ஜூட் சம்பத் (22 ) என்பவரே காயமடைந்தார்.

ஜா-எல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...

அதிமுகவுக்கு குட்பை சொல்ல போகிறாரா சி.வி.சண்முகம்?

விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவின் முகமாக கால் நூற்றாண்டு காலமாக அடையாளப்படுத்தப்பட்டவர் சி.வி.சண்முகம்....

திருச்சியில் முதல்வர் விஜய்யை வரவேற்ற துரை வைகோ – ‘திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்’ என ஆதங்கம்

நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக திருச்சி விமானம் நிலையம் வந்த முதல்வர் விஜய்யை,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்