24.4 C
Jaffna
January 5, 2025
Pagetamil
சினிமா

நாளுக்கு நாள் மோசமாகும் கொரோனா வைரஸ்;இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்வதாக இசைப்புயல் ரஹ்மான்..

மக்கள் கொரோனா வைரஸுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியாவுக்காக பிரார்த்தனை செய்வதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பேச்சாகத் தான் உள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும், மருத்துவமனையில் பெட் வேண்டும், மருந்து வேண்டும், பிளாஸ்மா வேண்டும், தயவு செய்து யாராவது உதவுங்கள் என பலர் கெஞ்சிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடவுளே, இந்த கொரோனா வைரஸை அழித்து எங்களை எல்லாம் காப்பாத்து என்று பலரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.முதல் அலையை விட இரண்டாவது அலை மோசமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவுக்காக பிரார்த்தனை என்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

அவரின் ட்வீட்டை பார்த்தவர்களோ,

கண்டிப்பாக இந்தியர்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யுமாறு உங்களின் ரசிகர்களிடம் கூறவும் சார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கைகளை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது.ட்வீட்டில் ஏன் பூ எமோஜியை பயன்படுத்தியிருக்கிறீர்கள் சார். ஏ.ஆர். ரஹ்மான் எங்களுக்கு தான் ஆதரவு தருகிறார் என ‘அவர்கள்’ சொல்லுவாங்க பாருங்களேன்.

இத்தனை நாட்களாக எங்கிருந்தீங்க சார்?. 99 சாங்ஸ் பற்றி மட்டும் தானே ட்வீட் செய்தீர்கள். நீங்களே இப்படி செய்யலாமா?. நீங்களாவது ட்வீட் செய்திருக்கிறீர்கள், பல பிரபலங்கள் எல்லாம் நமக்கென்ன வந்தது என்று இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் தயாரித்ததுடன், கதையும் எழுதிய 99 சாங்ஸ் படம் கடந்த 16ம் தேதி ரிலீஸானது. இஹான் பட் ஹீரோவாக அறிமுகமான 99 சாங்ஸ் படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். விஸ்வேஷுடன் சேர்ந்து கதை எழுதியதற்கு பதில் நீங்களே இயக்கியிருக்கலாமே என்று ரஹ்மானிடம் கேட்கப்பட்டது. நான் இயக்குவதாக இருந்தால் குறைந்தது 2 ஆண்டுகள் ஆகும். அதனால் தான் இயக்கவில்லை என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாக்‌ஷி அகர்வால் திருமணம்!

Pagetamil

12 ஆண்டு பிரச்சினை தீர்ந்து வெளியாகிறது மதகஜராஜா

Pagetamil

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது ‘விடாமுயற்சி’

Pagetamil

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா தந்தை தற்கொலை

Pagetamil

சல்மான் கான் மீது காதல்: நினைவு கூர்கிறார் சுஷ்மிதா சென்

Pagetamil

Leave a Comment