கடல் எப்போதும் தனக்குள் பல ஆச்சர்யங்களை உள்ளடக்கியது தான். அதில் நமக்குத் தெரியாத பல ஆயிரம் விலங்குகள் வாழ்கின்றன. அவற்றில் சில மட்டுமே எப்போதாவது நம்முடைய கண்களில் படும். அப்படி மிக மிக அரிதாக இருக்கக்கூடிய நீல நிற லாப்ஸ்டர் ஒன்று மீனவர் ஒருவரின் வலையில் சிக்கியிருக்கிறது.
அட்லாண்டிக் கடலின் கான்வால் கடற்கரை பகுதியில், மீன் பிடிக்கச் சென்ற ஒருவரின் வலையில் நீலநிற லாப்ஸ்டர் ஒன்று சிக்கியிருக்கிறது. பொதுவாக லாப்ஸ்டர் என்றால் பிரௌன், கிரே நிறங்களில் தான் இருக்கும். ஆனால் தன்னுடைய வலையில் மிக அரிதாக நீல நிற லாப்ஸ்டர் சிக்கியிருந்ததால் மகிழ்ச்சியடைந்த அந்த இளைஞன் அதை நிறைய புகைப்படங்கள் எடுத்து, தேசிய கடல்வாழ் உயிரிகள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி இருக்கிறார்.
அதை பார்த்த ஆய்வாளர்கள், இது மிக அரிய வகை என்றும், இரண்டு மில்லியன்களில் ஒன்று தான் இப்படி இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.இந்த அழகான நீலநிற லாப்ஸ்டர் மிக சின்ன சைஸில் இருந்ததால், இதை நிலத்திற்கு எடுத்து வர வேண்டாம், கடலிலேயே வளரட்டும் என்று அந்த மீனவன் மீண்டும் கடலிலேயே அதை விட்டு விட்டான்.
தான் இப்போதுதான் இரண்டாவது முறையாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்கிறேன். இப்படியொரு அதிசய லாப்ஸ்ட்ர் என் வலையில் விழுந்திருக்கிறது. இது என்னுடைய அதிர்ஷ்டம் என்று அவர் கூறியிருக்கிறார். எது எப்படியோ! பார்க்கவே பயமாக இருக்கும் லாப்ஸ்டர் ப்ளூ கலரில் ரொம்பவே அழகு தான்.