பிக் பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்று பிரபலமானவர்களில் சம்யுக்தாவும் ஓருவர். அவர் மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான ஒருவராக இருந்தாலும் அவரை தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு பிக் பாஸ் ஷோ தான் அவரை பிரபலம் ஆக்கியது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்த பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தது. இரண்டு திரைப்படங்களில் அவர் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியானதும் உங்களுக்கு நினைவிருக்கும்.இந்நிலையில் சம்யுக்தா தற்போது டிவி சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் அம்மன் சீரியலில் தான் நடித்து உள்ளார்.
பிக் பாஸில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டும் தான் கலந்துகொண்டு வருகிறார்கள். அர்ச்சனா விஜய் டிவியில் தொகுப்பாளராகவே இணைந்துவிட்டார். அவர் தற்போது Mr & Mrs சின்னத்திரை ஷோவை தொகுத்தும் வழங்கி வருகிறார்.ஆனால் சம்யுக்தா மட்டுமே ஏன் வேறு டிவிக்கு போனார் என நெட்டிசன்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இனிமே தான் ஆட்டமே ஆரம்பம்! 😍#Amman | திங்கள் – சனி இரவு 7:30 மணிக்கு நம்ம கலர்ஸ் தமிழில் #Throwback | #Sakthi | #ColorsTamil pic.twitter.com/VsIk6ziCCG
— Colors Tamil (@ColorsTvTamil) April 24, 2021