அழகான குரங்கு ஒன்று காய்கறி விற்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அழகான குரங்கு ஒன்று தெருவோர காய்கறி கடை ஒன்றில், காய்கறிகள் மற்றும் எடை போடும் மெஷினுக்கு நடுவே காய்கறி விற்பனை செய்பவரைப் போன்று அழகாக அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சி எங்கு, எப்போது நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். அந்த குரங்கிடம் காய்கறி வாங்க விரும்புவதாக பலரும் கமெண்ட் அடித்திருந்தார்கள். இதேபோன்று மற்றொரு குரங்கு வீடியோவும் சில நாட்களுக்கு முன் படுவைரலாகி இருந்தது.
அந்த வீடியோவில் குரங்கு ஒன்று வீட்டின் மொட்டைமாடி சுவரில் ஸ்மார்ட்போன் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு ஜாலியாக கேம் விளையாடிக் கொண்டிருந்தது. கீழ் மாடியில் போனை குரங்கிடம் பறிகொடுத்த இரண்டு சிறுவர்கள் சோகமாக நின்றுகொண்டு குரங்கையே வேடிக்கைப் பார்த்தனர். ஆனால் அந்த குரங்கு அவர்களைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தது.
சமீபத்தில் இந்த இரண்டு குரங்கு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரல்.