ஈராக் வைத்தியசாலையில் ஒட்சிசன் சிலிண்டர் வெடிப்பால் 27 கொரோனா நோயாளிகள் பலி!

Date:

தென்கிழக்கு பாக்தாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்தனர். இங்கு கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது..

ஈராக் தலைநகரின் தியாலா பிரிட்ஜ் பகுதியில் உள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து, ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்டதாக ஈராக் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல நோயாளர் காவு வண்டிகள் மருத்துவமனையை நோக்கி விரைந்து வந்து, தீ விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச் சென்றதாக அருகிலுள்ள ரொய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் ஒருவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் காயமடையாத நோயாளிகளும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈராக் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் காதிம் போஹனை மேற்கோளிட்டு, நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 120 பேரில் 90 பேர் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், தீயை அணைத்துள்ளதாகவும் அரச செய்தி நிறுவனமான ஐ.என்.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

https://twitter.com/i/status/1386082639396757509

ஈராக்கில் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102,5288.  இறப்புகள் 15,217 என்று சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

 

spot_imgspot_img

More like this
Related

வீடு பிரித்து 1 கோடி 15 இலட்சம் கொள்ளையிட்ட இருவர் கைது

வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய்...

அனுபவமற்ற ஆட்சியால் நாடு சீரழிந்தது; நாட்டை மீட்க SJB மட்டுமே முடியும் – ஹலீம்

அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்