இலங்கையில் நேற்று பதிவான 969 தொற்றாளர்களில் 251 பேர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கோவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இருந்து 236 பேரும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 194 பேரும், களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேர், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர், காலி மாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 09 பேர், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேர், புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த 07 பேர், அனுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 08 பேர், மொனராகலை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 28 பேர், பொலன்னருவை மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேர், மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேரும், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வந்த 38 பேரும் நேற்று பதிவாகியுள்ளனர்.




