வலிமை படத்தில் நடிக்கும் அஜித், ஏறத்தாழ 95 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டார். இன்னும் 1 வாரம் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சி இருக்கிறது. மேலும் படத்தை பார்த்த அஜித், படம் ரொம்ப கிளாஸ் ஆக இருக்கிறது என்றும் வெகுஜன பாமர மக்களுக்கும் படம் போய் சேரவேண்டும் என்பதற்காக சில காட்சிகளை வைக்கச் சொல்லி உள்ளார்.
மேலும் அடுத்த படத்தையும் H. வினோத் அவர்களையே இயக்க கூறியுள்ளார். இந்தநிலையில், வலிமை படத்தை பற்றின Update வராமல் காத்திருக்கும் ரசிகர்களுக்கு, வலிமை படத்தின் பிரமோஷன் பணிகள் மே 1 முதல் ஆரம்பிக்கும், அதாவது தலையின் 50 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதன் பணிகள் தொடங்கும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறினார்,
அதனால் ரசிகர்கள் அஜித்தின் பிறந்த நாளுக்கு ஆர்வமாக காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இடி விழுந்தது போல் ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது கொரோனா இரண்டாம் அலை காரணத்தினால் பல இந்தியர்கள் வேலை இழந்து துன்பத்தில் தவிக்கின்றனர்.
இந்த நிலையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்து கொண்டாடினால் நாகரீகமாக இருக்காது. எனவே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வேறு ஒரு தேதியில் வெளியிடுகிறோம். என்று போனிகபூர் அறிவித்துள்ளார். என்ன தான் மனசு வலிச்சாலும் தலையின் இந்த முடிவுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.