2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து குற்றவியல் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரினர் நடத்திய நீண்ட விசாரணையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், இருவருமே தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நிதியைப் பெற அவர்களுக்கு உதவியதாகவும் ஆதாரங்கள் தெரிவித்தன என்று அமைச்சர் கூறினார்.
பொலிசார் தாக்குதல் தொடர்பான எட்டு ஆவணங்கள் சட்டமா அதிபர் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கணிசமான ஆதாரங்கள் சேகரிக்கப்படும் போதெல்லாம் விசாரணைகள் தொடரும் என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றார்.