கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், பெண்கள் போல சேலை கட்டிக் கொண்டு, மேக்கப், லிப்ஸ்டிக் சகிதம் அணிந்து போட்டோவுக்கு கொடுத்த போஸ், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர் இல்லை. அது உடைகள் விஷயத்திலும் பொருந்தும் போல. ஆண்கள் பெண்களின் உடையை அணிவதும், பெண்கள் ஆண்களின் உடையை அணிந்து கொள்வதும் தற்போது பேஷனாகி வருகிறது. இதுவரை ஆண்கள் உடையை பெண்கள் அணிந்து நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பெண்கள் அணியும் சேலையை அணிந்து கொண்டு, கோல்கட்டா இளைஞர் ஒருவர் கொடுத்த போஸ், இன்டர்நெட்டில் வைரலாக பரவி வருகிறது.
கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் புஷ்பக். இவர் தற்போது இத்தாலியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி, வங்க மக்களின் புத்தாண்டு கொண்டாட்டப்பட்டது. அப்போது பெண்களை போல மேக்கப் போட்டுக் கொண்டு, உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு, சேலையை கட்டிக் கொண்டு, புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். பச்சை வண்ணத்திலான சேலையை நேர்த்தியாக அவர் கட்டி இருப்பது பார்ப்பதற்கே அழகாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் தனது சேலை கட்டிய புகைப்படத்தை பதிவிட அது வைரலானது.
கடந்த ஆண்டு புத்தாண்டின் போது, லிப்ஸ்டிக் போட்ட தனது புகைப்படத்தை கொல்கத்தாவில் இருக்கும் தனது அம்மாவுக்கு அனுப்ப, அதனை பார்த்த அண்டை வீட்டில் வசிப்பவர்கள் விமர்ச்சித்திருக்கின்றனர். இதனையடுத்து புஷ்பக்கை அவரது அம்மா கண்டித்திருக்கிறார். பதிலடி தரும் விதமாக மறுநாளும் லிப்ஸ்டிக் போட்ட புகைப்படத்தை அனுப்பியதுடன், அண்டை வீட்டார்களுக்கும் சேர்த்து லிப்ஸ்டிக்கை பார்சலில் அனுப்பி வைத்திருக்கிறார். யாரு சாமி இவரு!!