18 வயது யுவதி உள்ளிட்ட மேலும் 4 கொரோனா மரணங்கள்!

Date:

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வத்தளையைச் சேர்ந்த 18 வயது யுவதி,  COVID 19 நிமோனியா மற்றும் இதய சிக்கல்கள் காரணமாக புதன்கிழமை ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.

நிட்டம்புவாவைச் சேர்ந்த 35 வயது ஆண் ஒருவர், COVID 19 நிமோனியா காரணமாக ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார்.

பன்னிபிட்டியை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக ஹோமாகம மருத்துவமனையில் நேற்று காலமானார்.

மகரகமவைச் சேர்ந்த 71 வயது பெண் ஒருவர் கோவிட் நிமோனியா மற்றும் பல உடல்நலக் கோளாறுகள் காரணமாக  கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நேற்று காலமானார்.

சமீபத்தில் நாட்டிற்கு வந்த அவர், வீட்டில் சுய தனிமைப்பட்டிருந்த போது, கொரோனா அறிகுறிகள் வெளிப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்