அம்பாறையும் அபாய கட்டத்தில்!

Date:

மாறுபட்ட அல்லது திரிவுபட்ட கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸானது அதிகமானோரை தாக்கும் வீரியம் கொண்டுள்ளதுடன் மிக வேகமாக பரவுகின்றதாக காணப்படுகின்றது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று(24) மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தெரிவித்ததாவது,

மாறுபட்ட அல்லது திரிவுபட்ட கொரோனா வைரஸ் தாக்கம்
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த கொரோனா வைரஸானது அதிகமானோரை தாக்கும் வீரியம் கொண்டுள்ளதாக உள்ளது. மிக வேகமாக பரவுகின்றதாக காணப்படுகின்றது. ஆரம்பத்தில் காணப்பட்ட கொரோனா வைரஸானது ஒருவரில் இருந்து இருவருக்கு பெரும்பாலும் பரவுவதாக இருந்துள்ளது. தற்போது உள்ள கொரோனா வைரஸானது நான்கு முதல் ஐவர் வரை பரவக்கூடிய ஏதுநிலையில் காணப்படுகின்றது.

தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள விஞ்ஞானபூர்வமான தகவல்களின் படி சளித்துணிக்கைகள் காற்றில் ஒன்றரை மணித்தியாலம் வரை தங்கி நிற்கக்கூடிய சாத்தியகூறுகள் காணப்படுகின்றது. ஆகவே நோயாளி ஒருவர் அவ்விடத்தில் வந்து நின்று தும்மி விட்டு சென்று விட்டால் ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னர் இன்னுமொருவர் அவ்விடத்திற்கு வந்தால் கூட அந்த நோய் தொற்றுவதற்குரிய ஏது நிலை காணப்படுகின்றது.

ஆகவே மக்கள் இதில் விழிப்படைந்தவர்களாக அதிகளவு மக்கள் சேர்கின்ற இடங்களுக்கு செல்வதை முற்று முழுதாக தவிர்க்க வேண்டும். முகக்கவசங்களை சரியான முறையில் அவர்கள் தொடர்ச்சியாக அணிய வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும். கடந்த காலங்களில் பல தரப்பினரிடம் இருந்தும் கொரோனா தடுப்பு விடயத்தில் ஒத்துழைப்புகளை நாம் பெற்றிருந்தோம்.

உண்மையில் பொலிஸார் இராணுவம் பொது நிர்வாக அமைச்சின் கீழான அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் உள்ளுராட்சி சபை மாநகர சபை பிரதேசயினருடன் எமது சுகாதார பிரிவினர் இணைந்து பணியாற்றி இருந்தார்கள். இந்த விடயத்தில் ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கது. இலங்கையில் கொரோனாவினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு காரணம் ஊடகங்கள் ஆகும். அந்த வகையில் நேற்று கூட இந்த பிரதேசத்திற்குரிய இராணுவ தளபதியுடன் ஒரு கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு இருந்தேன்.

சுகாதார விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தி தருவதற்கு இராணுவத்தின் உதவியை நாடி இருந்தேன். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். நேற்று நீங்கள் அனைவரும் அறிந்து இருக்க முடியும் கல்முனை சாய்ந்தமருது அக்கரைப்பற்று பொத்துவில் ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகவே இருந்தது. ஆகவே ஏற்கனவே இந்த நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்து விட்டார்கள்.

கொரோனா வைரஸானது உலகலாவிய ரீதியில் 3 வது அலையினை ஏற்படுத்தியுள்ள இத்தருணத்தில் எமது அண்டை நாடான இந்தியா இந்த நோயினால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றுக்குள்ளாவதும் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து வருவதும் அவதானிக்க முடிகின்றது. அதனுடைய பிரதிபலிப்பு இலங்கையிலும் காணப்படுகின்றது. கடந்த இரண்டு வாரங்களாக சித்திரை வருட புதுவருட கொண்டாட்டத்தின் பின்னர் இவ்வைரஸ் தொடர்பில் இலங்கையில் அதீத உயர்ச்சி காணப்படுகின்றது.

அந்த வகையில் இலங்கையில் நாள் ஒன்றிற்கு 200 பேர் தான் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது 900, 1000 பேர் பாதிக்கப்பட்டு வருவது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 5 ,6 கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று(23) கல்முனை பிராந்தியத்திலும் நாங்கள் பிசிஆர் அறிக்கையின் பிரகாரம் 9 தொற்றாளர்களை அடையாளம் கண்டிருந்தோம்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து 2 பேருமாக இந்த பிராந்தியத்தில் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல நாட்களாக பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையான எமது பிராந்தியத்தில் ஒருவருமே இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தாலும் நேற்று திடிரென கண்டுபிடிக்கப்பட்ட 9 பேரின் நிலையை கொண்டு எமது பிராந்தியத்தின் அபாய நிலைமையை உணர முடிகின்றது.

ஆகவே எமது சுகாதார சேவை இணைந்த சேவைகள் இந்த கட்டுப்பாட்டு நடவடிக்கையில் மிக தீவிரமாக நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.அதன் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று கொண்டு இருக்கும்.இதற்கு மக்களின் பூரண ஒத்தழைப்பு எமக்கு தேவை.முகக்கவசம் சமூக இடைவெளி கைகளை கழுவுதல் ஒன்று கூடுவதை தவிர்த்தல் போன்ற நான்கு விடயத்தில் உங்கள் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்றார்.

-பா.டிலான்-

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்