ஹரினை வைத்தியசாலையில் பார்வையிட்ட சஜித்!

Date:

கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்வதென்றால், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச இன்று அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹரின் தெரிவித்த கருத்து தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (பி.டி.ஏ) கீழ்  கைது செய்ய முயற்சிகள் நடப்பதாப சஜித் பிரேமதாச இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்த பின்னர் சஜித் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்த விவகாரத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஹரின் பெர்னாண்டோ இன்று குற்ற புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டார்.

இருப்பினும், தனது மருத்துவ நிலை காரணமாக இன்று சமூகமளிக்க முடியவில்லையென்றும், வேறொரு திகதி வழங்குமாறும் ஹரின் தெரிவித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்