நாட்டில் நேற்று 672 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காண்பட்டனர்.
நேற்று கொழும்பு மாவட்டத்தில் இருந்து 92 பேர் தொற்றிற்குள்ளாகினர். கம்பஹா மாவட்டத்தில் இருந்து 117 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 64 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 99 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 39 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 32 பேரும், மொனாரகல மாவட்டத்தில் இருந்து 13 பேரும், மாத்தறை மாவட்டத்திலிருந்து 4 பேரும், கேகாலை மாவட்டத்திலிருந்து 15 பேரும், அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து 15 பேரும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 07 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 01, நுவரெலியா மாவட்டத்திலிருந்து 05 பேரும், ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலிருந்து 16 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 15 பேரும், kாத்தளை மாவட்டத்திலிருந்து 12 பேரும், பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து 07 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்த 15 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.




