உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் எடையை கணிசமாகக் குறைப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் பேசிய நளின் பண்டார, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார்.
ஆரம்பத்தில் 12.5 கிலோவாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் 3 கிலோ குறைந்துள்ளது. அதே நேரத்தில் விலை ரூ .100 குறைந்துள்ளது, ஆனால் உண்மையில் ரூ .250 அதிகரித்துள்ளது என்றே கொள்ள வேண்டுமென்பதை சுட்டிக்காட்டினார். எரிவாயு விலை சூத்திரம் என்ன என கேள்வியெழுப்பினார்.
விலைகளை நிர்ணயிப்பது நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொறுப்பு என்று கூறிய அமைச்சர் குணவர்தன வாயு ஒரு அன்றாட தேவை, எந்தவொரு தொடர்புடைய மோசடியையும் ஆராய்வதாக உறுதி அளித்தார்




