29.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
ஆன்மிகம்

உங்களின் சுண்டு விரல் இப்படி இருக்கிறதா, அதன் சிறப்பியல்புகள் என்ன தெரியுமா?

ஜோதிடத்தில் ஜாதத்தை வைத்து பலன் பார்ப்பதும், நாடி ஜோதிடம், கை ரேகை ஜோதிடம் என பல வழிகளில் பலன் பார்க்கப்படுகிறது.நம் கையில் சுண்டு விரல் எப்படி அமைந்திருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்ப்போம்.

உங்கள் சிறிய விரல் என்ன கூறுகிறது?

நம் கை ரேகைகளைப் போலவே நம் ரேகையைப் போலவே, விரலின் அமைப்பும் பல்வேறு அறிகுறிகளை உணர்த்துவதற்கும், பல்வேறு அதிர்ஷ்டங்களைக் குறிப்பிடுவது போல அமைந்துள்ளது.ஜோதிடத்தில் உள்ள பல்வேறு கணிப்பு முறைகளில் கை ரேகை, கை அமைப்பு பலன்களும் கூறப்படுகிறது.

  • சிறிய விரல் முன்னோக்கி வளைந்திருந்தால்
உங்களின் கைகளில் உள்ள சுண்டு விரல் நேராக்க முடியாமல், சற்று முன்னோக்கு வளைந்தவாறு இருந்தால் அத்தகையோர் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்களின் வாழ்வில் பணத்திற்கு குறை இருக்காது.
இவர்களின் சொந்த முயற்சியில் சமூகத்தில் ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவார்கள். அதுமட்டுமல்லாமல் ஒருவரின் சுண்டு விரல் சாதாரண நீளத்தில் இருப்பின் அவர்கள் கடின உழைப்பின் மூலம் மகத்தான வெற்றியை அடைவார்கள்.

  • வெற்றியை தரும் விரல் அமைப்பு

கைரேகை விதிப்படி ஒரு நபரின் சுண்டு விரலின் கணுக்கள் சதுரம் போல இருப்பின் புனிதமாக கருதப்படுகிறது. அத்தகையவர்களுக்கு மோசமான சூழ்நிலைகளில் கூட வெற்றியை அடையக்கூடிய சிறப்பான வழி ஏற்படும்.

தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில், வேலை என்ற இரண்டையும் சமநிலையுடன் கையாளக்கூடியவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் அன்பும் பாசமும் பெரியளவில் கிடைக்காததற்கு இதுவே காரணமாக அமைகிறது.

  • சுண்டு விரல் வெளிப்புறமாகச் சாய்ந்திருந்தால்
கைரேகை, கை விரல் ஜோதிடப்படி, ஒரு நபரின் சிறிய விரல் நீளமாக பின்னோக்கி சாய்ந்திருப்பின் அந்த நபர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு வரவேற்பும், நம்பவும் செய்வார்கள். அதுமட்டுமல்லாமல் வாழ்வில் வரம்பற்ற வெற்றியைப் பெறுவார்கள். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பார்கள். ஆன்மிக விஷயங்களில் நாட்டம் அதிகமாக இருக்கும்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 28.02.2025 – வெள்ளிக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 27.02.2025 – வியாழக்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 26.02.2025 – புதன்கிழமை

Pagetamil

இன்றைய ராசி பலன்கள் – 25.02.2025 – செவ்வாய்க்கிழமை

Pagetamil

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள் – 24.02.2025

Pagetamil

Leave a Comment