உலக இளையோர் குத்துச்சண்டை:தங்க பதக்கங்களை குவித்த இந்திய வீராங்கனைகள்..!!

Date:

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியின் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஜித்திகா, போலந்தின் நாதலியாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் போலந்தின் நாதலியா குக்சிஸ்காவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

51 கிலோ எடைப்பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பேபிரோஜிசனா சானு 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் வாலெரியா லின்கோவாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் இந்திய வீராங்கனைகள் பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் தங்கத்தை தட்டிச் சென்றனர்.

spot_imgspot_img

More like this
Related

கல்முனை உப பிரதேச செயலக வழக்கு: விசாரணை நவம்பர் 03 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...

ஈரான் நடவடிக்கையில் அமெரிக்கா இழந்த விமானங்களின் விபரம் வெளியானது!

பெப்ரவரி மாத இறுதியில் இருந்து ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது குறைந்தது...

பசிலின் மற்றொரு காணிக்கும் ஆப்பு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், மாத்தறை பிரவுன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்