கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளராக கூட்டமைப்பின் விஜிந்தன்!

Date:

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று இடம்பெற்ற நிலையில் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் தெரிவாகிள்ளார்.

வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்ற அமர்வில் 22 உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர். இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்காத நிலையில் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் ஆக மூன்று பேர் நடுநிலை வகித்த நிலையில் 19 பேர் வாக்குகளை பதிவு செய்தனர்

பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஒருவருமாக 4 பேர் பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அன்ரனி ரங்க துசாரவுக்கு வாக்களித்தனர். ஏனைய கட்சிகளைச் சார்ந்த 15 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கமலநாதன் விஜிந்தனுக்கு வாக்களித்தனர்.

அவருக்கு15 வாக்குகள் கிடைத்தது.

இதனடிப்படையில்பெற்று கரைதுறைப்பற்று பிரதேச சபையனுடைய புதிய தவிசாளராக கமலநாதன் விஜிந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இடம்மாறி படுத்த முதியவருக்கு நேர்ந்த விபரீதம்!

அஹுங்கல்லவின் கல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 74 வயது...

ஞானசாரருக்கு சிக்னல் கிடைக்கவில்லையாம்!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்