2001 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் காயத்ரி ஜெயராம் . அதன் பிறகு விஜய்யுடன் வசீகரா படத்தில் கிளாமர் குயினாக நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்திருந்தாலும் எங்கேயுமே நினைத்த இடத்தை பிடிக்க முடியாததால் சீரியலில் நுழைந்தார். சீரியலில் இவருக்கு ஏக போக வரவேற்பு கிடைத்தது.
சன் டிவியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற நந்தினி, அழகு போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா திரைப்படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்தார்.
இளம் வயதில் அனுஷ்காவை போல நல்ல உயரமும் பார்த்த உடனே பற்றிக்கொள்ளும் தோற்றமும் கொண்ட காயத்ரி ஜெயராம் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியாமல் போனது சோகமான விஷயம்தான். ஆனால் முதல் படத்தில் அவரை உள்ளாடையுடன் ஓடவிட்ட சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
மனதை திருடிவிட்டாய் படத்தில் ஊட்டியில் மஞ்ச காட்டு மைனா என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதில் மேலாடை மட்டும் அணிந்து கொண்டு இடுப்பை காட்ட வேண்டும் என்பதுதான் பிரதானமாக இருந்தது. முதலில் அவர்கள் கொடுத்த மேலாடையில் அங்கங்களை மறைக்கும்படி மெல்லிசான உடை பொருத்தப்பட்டிருந்ததாம்.