24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மேலுமொரு தகவலை வெளியிட்ட எதிர்க்கட்சி!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இந்த தகவலை தெரிவித்தார்.

2019 ஏப்ரல் 29 ஆம் திகதி பாணந்துறையில் ஒரு நபர் இராணுவ புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார், மேலதிக விசாரணைகளில் அவர் பல முக்கியமான விவரங்களை வெளிப்படுத்தினார்.

இதுபோன்ற ஒரு விவரம் என்னவென்றால், 2017 இல் குருநாகலில் அவர் நௌபர் மௌலவியை சந்தித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியென அவரையே இப்போது அரசு கூறுகிறது. அப்பொழுது அவரது மகனிற்கு நௌபர் மௌலவி சொற்பொழிவாற்றினார். அங்கு அவர் சஹ்ரான் ஹாஷிமுடன் இருந்த 20 பேரை சந்தித்தார். தனது போதனைகளை முன்னெடுத்துச் செல்ல அவருக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் அவரை முற்படுத்திய போது சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் இந்த விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக எம்.பி. ரஹ்மன் கூறினார், அவர் நௌபர் மௌலவி மற்றும் சஹ்ரான் ஹாஷிம் ஆகியோருடன் தொடர்ந்து பணியாற்றினார் என்று கூறினார்.

ஒக்டோபர் 2019 இல் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில், அவர் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பும் ஆபத்தான தனிநபர் என்று ரிஐடி குறிப்பிட்டிருந்தது. மற்றவர்களுடன் அவரை ஒன்றாக தடுத்து வைப்பது ஆபத்தானது, தீவிரவாத கருத்துக்களை பரப்புவார், அதனால் தனி சிறையில் தடுத்து வைக்க கோரிக்கை விடுத்திருந்தது.

ஆனால், யாரித்தது, 2020 ஆம் ஆண்டில் சந்தேக நபரை விடுவிக்க சட்டமா அதிபர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளர் மீது குற்றச்சாட்டு

east tamil

குடத்தனையில் பொலிஸ், இராணுவம், அதிரடிப்படை இணைந்து அதிரடி சோதனை

east tamil

முல்லைத்தீவில் தூக்கிலிடப்பட்ட நாய்: செல்லமாக வளர்த்த பெண் சொல்லும் கதை; கொடூர பெண்ணுக்கு விளக்கமறியல்!

Pagetamil

யாழ் பல்கலையில் இரவில் பெண்களின் உள்ளாடைகள் காணப்படும் சம்பவம் உண்மையா?: மற்றொரு விளக்கம்!

Pagetamil

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

Leave a Comment