இன்று இதுவரை 520 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, நாட்டில் மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 98,570 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 216 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,884 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 4,056 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 573 நபர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளான சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளனர்.




