தடுப்பூசி போட்டால் 2 கிலோ தக்காளி இலவசம்!

Date:

மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி, கர்நாடகாவுக்கு அடுத்து சத்தீஸ்கரில் தினசரி கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அந்த மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 15,000 பேருக்கு தொற்று ஏற்படுகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தின் 20 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதேநேரம் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

எனினும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளால் தடுப்பூசி மையங்களில் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண பிஜாப்பூர் மாநகராட்சி மையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அனைவருக்கும் 2 கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன்காரணமாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இந்த திட்டத்துக்காக உள்ளூர் வியாபாரிகள், தக்காளிகளை இலவசமாக வழங்குகின்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்கள், தக்காளி வாங்கிச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்னவுக்கு எதிரான கோட்டா கால நடவடிக்கை அரசியல் ரீதியானது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளான ரவி...

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால்...

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்