24.8 C
Jaffna
January 18, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

2வது ஆண்டு இரத்த நினைவுகள்: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் கதை!

2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு வழிபாட்டில் பல உயிர்களை கொன்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகிறது. இந்த துயர நினைவை இலங்கை இன்று நினைவில் கொள்கிறது.

மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள், கொழும்பில் மூன்று ஹோட்டல்கள், ஒரு சுற்றுலா விடுதி மற்றும் தெம்ட்டகொடவில் உள்ள ஒரு வீட்டில் நடந்த குண்டுவெடிப்பில் 270 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

400 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி முதலில் நீர்கொழும்பில் கட்டானவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயத்தில், காலை 8:45 மணிக்கு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அடுத்த 30 நிமிடங்களில் கிங்ஸ்பரி ஹோட்டல், ஷாங்க்ரி-லா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல்,  மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயத்தில் குண்டுகள் வெடித்தன.

பாதிக்கப்பட்டவர்களில் 45 குழந்தைகள் மற்றும் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருந்தனர்.

அன்று பிற்பகல் 1:30 மணியளவில் தெஹிவளையில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் ஒரு குண்டு வெடித்தது.

பாதுகாப்பு தரப்பினரால் சுற்றிவளைக்கப்பட்டதை தொடர்ந்து, தெம்டகொடவில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு தற்கொலைத் தாக்குதல்கள் பதிவாகின.

புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணைகளை தொடர்ந்து தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் சஹ்ரான் ஹாஷிம் தாக்குதல்களைத் திட்டமிட்ட சூத்திரதாரி என்று அறிவிக்கப்பட்டது.

அன்றைய தினமே, சஹ்ரான் ஹாஷிம் மற்றும் பல அடையாளம் தெரியாத நபர்களுடன் சத்தியப்பிரமாணம் செய்யும் வீடியோ பரப்பப்பட்டது, அதன்பின்னர் தொடர் விசாரணையில் பலர் கைதாகினர். சாய்ந்தமருதில் எஞ்சிய தீவிரவாதகுழுவினர் முற்றுகையிடப்பட்டனர். அவர்கள் தம்மைதாமே அழித்துக் கொண்டனர்.

நீண்ட விசாரணையின் பின்னர், தற்போது காவலில் இருக்கும் நௌபர் மௌலவியே தாக்குதல்களின் சூத்திரதாரி என்று அரசாங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

தாக்குதல் தொடர்பாக முன்னெச்சரிக்கைகள் கிடைத்தும், அதை அதிகாரிகளினால் தடுக்க முடியவில்லை.

தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின்படி, அப்போதைய அரச புலனாய்வு பிரிவின் பிரதான நிலந்த ஜெயவர்த்தன, ஏப்ரல் 4ஆம் திகதி தாக்குதல் பற்றிய முதலாவது புலனாய்வு அறிக்கையை பெற்றுள்ளார். தனது தகவல் மூலம் ஒன்றின் வழியாக வட்ஸ்அப்பில் தகவலை பெற்றார்.

2019 ஏப்ரல் 05 ஆம் திகதி தனக்கு இதே போன்ற தகவல்கள் எழுத்துப்பூர்வமாக கிடைத்திருப்பதை அவர் உறுதிப்படுத்தினார். இதன் விளைவாக அவர் தனது அதிகாரிகளின் கூட்டத்தை அழைத்தார், பெறப்பட்ட தகவல்கள் விவாதிக்கப்பட்டன.

ஏப்ரல் 07: எஸ்ஐஎஸ் இயக்குனர் இந்த தகவல்களை தேசிய புலனாய்வுத் தலைவர் (சிஎன்ஐ) சிசிர மெண்டிஸுடன் பகிர்ந்து கொள்கிறார்

ஏப்ரல் 08: எஸ்ஐஎஸ் இயக்குனர் இந்த தகவல்களை அப்போதைய பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோவுடன் பகிர்ந்து கொண்டார். ஐ.ஜி.பி புஜித் ஜெயசுந்தரவுக்கு தெரிவிக்க அவர் அறிவுறுத்துகிறார்.

ஏப்ரல் 09: உளவுத்துறை தகவல் கிடைத்ததும் முதல் முறையாக புலனாய்வு ஒருங்கிணைப்புக் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்திற்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளர் தலைமை தாங்கியதாகவும், கூட்டத்தில் முப்படைதளபதிகள் மற்றும் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் கலந்து கொண்டதாகவும் எஸ்ஐஎஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.  ஆணைக்குழு அறிக்கையின்படி, 2019 ஏப்ரல் 09 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எஸ்.ஐ.எஸ் இயக்குநர் தனக்கு கிடைத்த உளவுத்துறை குறித்து சுருக்கமாக தெரிவிக்கவில்லை.

நிகழ்ச்சி நிரல் விஷயங்களைப் பற்றி விவாதித்த பின்னர், அமைச்சின் செயலாளர் எஸ்.ஐ.எஸ் இயக்குநரிடம் பெறப்பட்ட உளவுத்துறை குறித்த புதுப்பிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் கூறியிருந்தார்: “நிலந்த, என்ன நடக்கிறது?”. இதற்கு எஸ்ஐஎஸ் இயக்குனர் விவரங்களுடன் ஒரு குறிப்பை அனுப்புவார் என்று கூறியிருந்தார் – “ஐயா, நான் ஒரு சிறப்பு அறிக்கையைத் தயாரிக்கிறேன். நான் இன்று நேரடியாக ஐ.ஜி.பி மற்றும் சி.ஐ.டி க்கு அனுப்புவேன் ” என்றார்.

ஏப்ரல் 09 ஆம் திகதி ஐ.சி.எம்மில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, கூட்டத்தில் எந்த உளவுத்துறை தகவலும் பகிரப்படவில்லை என்றும், உளவுத்துறை பகிரப்பட்டால் தாக்குதல்களைத் தடுக்க இராணுவம் தகுந்த நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும் என்றும் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

மாலை, ஏப்ரல் 09 – ஐ.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பப்பட்டது
ஏப்ரல் 09, 2019 அன்று எஸ்.ஐ.எஸ் இயக்குனர் ஐ.ஜி.பி மற்றும் சி.ஐ.டி க்கு அனுப்பியுள்ளார்,

“ரொப் செக்ரெட்” என்று குறிக்கப்பட்ட ஒரு கடிதம், பின்வரும் தகவலை உள்ளடக்கியிருந்தது-

தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் (என்.டி.ஜே) சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையில் தற்கொலைத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர். சில தேவாலயங்கள், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இலக்காக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எப்போது தாக்குதல் நடக்கும் என்பது குறித்து எந்த திகதியும் வழங்கப்படவில்லை. தற்கொலை தாக்குதல், ஆயுத தாக்குதல், கத்தி தாக்குதல் அல்லது டிரக் தாக்குதல் ஆகியவை தாக்குதலின் முறைகளில் அடங்கும் என்று அது கூறுகிறது. திட்டமிட்ட தற்கொலைத் தாக்குதலின் சஹ்ரான் ஹாஷிம், ஜா அல் குயிதால், ரில்வான், சஜி மௌலவி, ஷாஹித், மில்ஹான் மற்றும் பலர் ஈடுபடலாமென கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 10 – சஹ்ரான் ஹாஷிமை கைது செய்ய உத்தரவு
இயக்குநர், ரிஐடி 2019 ஏப்ரல் 10 ஆம் திகதி தனக்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாகவும், சஹ்ரான் மற்றும் பிறரை கைது செய்யுமாறு தனது அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். அதே நாளில் சஹ்ரானின் பேஸ்புக் பக்கத்தைத் தடுக்கும்படி அவர் பேஸ்புக்கிற்கு அறிவித்திருந்தார், மேலும் ஏப்ரல் 12, 2019 அன்று பேஸ்புக்கிலிருந்து ஒரு பதிலைப் பெற்றார், இதன் விளைவாக 2019 ஏப்ரல் 15 ஆம் திகதி பக்கம் தடுக்கப்பட்டது.

ஏப்ரல் 14 முதல் 16 வரை – சஹ்ரான் ஹாஷிமை கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன
சஹ்ரான் மற்றும் கூட்டாளிகளைத் தேடி 2019 ஏப்ரல் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் ரிஐடி அதிகாரிகள் பல பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தனர்.

ஏப்ரல் 16 – காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் வெடிப்பு
16 ஏப்ரல் 2019 காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது குறித்து எஸ்ஐஎஸ் இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலில் உள்ளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது, அதன் பின்னர் தான் உளவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் சஹ்ரான் தொடர்புபட்டுள்ளதாக எஸ்.ஐ.எஸ் இயக்குனர் பொலிஸ்மா அதிபருக்கு தகவல் அனுப்பினார்.

ஏப்ரல் 19 -இ ராணுவ புலனாய்வு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது எஸ்ஐஎஸ் இயக்குநர் இராணுவ புலனாய்வு இயக்குநருக்கு தகவல் கொடுத்தார், “இது போன்ற ஒரு சம்பவம் உள்ளது. நீங்கள் வேகமாக செயல்பட வேண்டும். உங்கள் ஆட்களிடம் சொல்லுங்கள் ”

ஏப்ரல் 20 – எஸ்ஐஎஸ் இயக்குனர் தனது மூலத்திலிருந்து வாட்ஸ்அப் வழியாக ஒரு செய்தியைப் பெற்றார்.

“சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது கூட்டாளிகள் இலங்கையில் ஒரு  தாக்குதல் – தற்கொலைத் தாக்குதல் – நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக 16 ஆம் திகதி காத்தான்குடி அருகே பாலமுனை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. 21.04.2019 அல்லது அதற்கு முன்னர் எந்த நேரத்திலும் அவர்கள் இலங்கையில் தங்கள் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளது என்று அறியப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு இடங்களில் ஒரு தேவாலயம் மற்றும் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் ஹோட்டல் ஆகியவை அடங்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன“ என்பதே அந்த செய்தி.

எஸ்ஐஎஸ் இயக்குனர் உரிய தரப்புக்களிற்கு தகவலை பரிமாறியதாக ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

21 ஏப்ரல் 2019 காலை 8.27 மணியளவில் எஸ்ஐஎஸ் இயக்குநருக்கு ஒரு செய்தி வந்தது:

“காலை வணக்கம். அவர்கள் இன்று 06.00 மணி முதல் 10.00 மணி நேரம் வரைக்குள் இயங்க வாய்ப்புள்ளது. அவர்களின் இலக்குகளில் ஒன்று கொழும்பு ஒரு மெதடிஸ்ட் தேவாலயம்” என கூறப்பட்டுள்ளது.

மேற்சொன்ன தகவல்களை காலை 8.32 மணியளவில் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்ததாக எஸ்.ஐ.எஸ் இயக்குனர் ஆணைக்குழுவில் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு, முதல் வெடிகுண்டு காலை 8.45 மணிக்கு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடித்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

Leave a Comment