27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொய்ட் கொலை: பொலிஸ் அதிகாரி குற்றவாளியென தீர்ப்பு!

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொய்ட் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பொலிஸ் அதிகாரி, டெரிக் சாவின் மீதான குற்றம் நிரூபணம் செய்யப்பட்டது. அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து கறுப்பின மக்கள் வீதிகளில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரைச் சேர்ந்தவர் ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் பிளாய்ட் கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் திகதி மினியாபொலிஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார்.‌

அப்போது அவர் வழங்கிய பணத்தில் 20 டொலர் கள்ளநோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் பொலிசுக்கு தகவல் கொடுத்தார். டெரிக் சாவின் தலைமையில் 4 பொலிசார் அங்கு விரைந்தனர்.‌ பின்னர் அவர்கள் புகார் தொடர்பாக விசாரிக்க அழைத்தபோது பிளாய்ட் பொலிஸ் வாகனத்தில் ஏற மறுத்தார்.

இதையடுத்து பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின், ஜோர்ஜ் பிளொய்ட்டை தரையில் கிடத்தி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார். என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள் என ஜோர்ஜ் பிளொய்ட் கெஞ்சிய போதும் விடவில்லை. சிறிது நேரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழந்தார்.

ஜோர்ஜ் பிளொய்ட் கழுத்தில் பொலிஸ் அதிகாரி முழங்காலை வைத்து அழுத்தியது, இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் திணறி உயிரிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதனைத் தொடர்ந்து ஜோர்ஜ் பிளொய்டின் சாவுக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டங்கள் அமெரிக்காவையே உலுக்கியது.

இதற்கிடையே ஜோர்ஜ் பிளொய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 பொலிசார் மற்றும் மினியாபொலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து டெரிக் சாவின் உள்பட 4 பொலிசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதில் டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் நிலை தற்செயலான கொலை, மூன்றாம் நிலை கொலை மற்றும் இரண்டாம் நிலை மனித படுகொலை ஆகிய அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் சாவின் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.

குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு 40-ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தீர்ப்பு வெளியானதும், கறுப்பின மக்கள் வீதிகளிற்கு இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment