உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்துமாறு கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை பற்றி அவர் மூச்சும் விடவில்லை. அனைத்து மக்களையும் பற்றி குரல் கொடுத்தால் அவர் உண்மையான இயேசுவின் தூதராக மாறுவார் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களிற்கு அஞ்சலி செலுத்துமாறு கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தத்தின் இறுதியில் 2008 முதல் 2009 வரை பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். 4 இலட்சம் பேர் முடங்கியிருக்க, 75,000 பேருக்கு மட்டும் உணவு அனுப்பினர். பலர் உணவு இல்லாமல் பலர் உயிரிழந்தனர். குழந்தைகள் கொல்லப்பட்டனர். எனினும், அவர்கள் யாருக்காகவும் கர்தினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குரல் எழுப்பவில்லை.
அவர்களிற்காகவும் நீங்கள் குரல் கொடுத்தால்தான் இயேசு பிரானின் துதராக அனைத்து மக்களும் மதிக்கும் மத தலைவராகுவீர்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்று தமிழ் இளைஞர்கள், செய்தியாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பல மாதங்களாக விசாரணையில்லாமல் தடுத்து வைக்கப்படுகிறார்கள். செய்தியாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். செய்தியை தேடிச் செல்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
கிளிநொச்சியில் சிவேந்திரன் என்ற ஆசிரியர் 4ஆம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு, தாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். என்னை பற்றியும் விசாரித்து தாக்கியுள்ளனர்.
இன்று கருத்து செல்பவதற்கும் நாடாளுமன்றத்தில் இடமில்லை. எதிர்க்கட்சி மீது வன்முறையை தூண்டுகிறார்கள். நாடாளுமன்றம் வன்முறையை தூண்டும் இடமா. சென்ற வருடமும் இதேநபர்கள்தான் வன்முறையை தூண்டினார்கள். பைபிளை தூக்கி எறிந்தார்கள். சபாநாயகர் ஆசனத்தை சேதப்படுத்தினர். இந்த சபையில் கருத்துக்கள் கேட்பதற்கு யாருமில்லை. கருத்தை மதிப்பவர்கள் இந்த நாடாளுமன்றத்தில் இல்லை.
இந்த பாராளுமன்றம் சிங்கள வன்முறைக்குரிய மன்றமா? இந்த இராணுவம் கதிர்காம அழகியை நிர்வாணமாக்கி கொன்றார்கள். எத்தனையோ தமிழ் பெண்களையும் நிர்வாணமாக்கி கொன்றார்கள். அதேபோலத்தான் இந்த சிங்கள அரசியல் தலைவர்களும் வன்முறையை தூண்டுபவர்களாக உள்ளனர். அவர்கள் நியாயமானவர்களா?
தாங்கள் வாக்களித்து பிரதிநிதியானவர்கள் பற்றி சிங்கள மக்கள் ஆராய வேண்டும் என்றார்.