29.6 C
Jaffna
April 19, 2024
உலகம்

செவ்வாயில் வெற்றிகரகமாக பறந்த நாசாவின் ஹெலிகொப்டர்!

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ஹெலிகொப்டர் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது.

கடந்த பெப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாய் கிரகத்தை படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது. மேலும், மண் துகள்கள் உள்ளிட்ட மாதிரிகளையும் பெர்சவரன்ஸ் ரேவர் சேகரித்து வருகிறது. பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகொப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெலிகொப்டர் மூலம் செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பில் நாசா ஆய்வு மேற்கொள்ளவுள்ளது. இந்த இன்ஜெனியூனிட்டி ஹெலிகொப்டரை கடந்த 11ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் பறக்கவிட நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால் மென்பொருள் தொடர்பான பிரச்சினையால், திட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது செவ்வாய்க்கிரகத்தில், ‘இன்ஜெனியூனிட்டி’ ஹெலிகொப்டர் வெற்றிகரமாகப் பறந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதன்மூலம் பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகொப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சூரிய ஒளியே உணவுதான்: ஒரு மாத குழந்தையை உணவளிக்காமல் கொன்ற தந்தைக்கு சிறை!

Pagetamil

டுபாய் வெள்ளத்தால் விமான சேவை தொடர் பாதிப்பு

Pagetamil

ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்

Pagetamil

ஈரான் ஏவுகணைகளை இடைமறிப்பதில் சவுதி பங்கேற்கவில்லை!

Pagetamil

அவுஸ்திரேலியாவில் மத வழிபாட்டிடத்தில் கத்திக்குத்து!

Pagetamil

Leave a Comment