30.6 C
Jaffna
April 10, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முரளிதரன்!

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கு, இருதய சத்திர சிகிச்சையை முரளிதரன் மேற்கொண்ட நிலையில், சிகிச்சை முடிந்த பிறகு, தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும், விரைவில் மீண்டும் ஹைதராபாத் அணியுடன் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் அவர் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார், இந்நிலையில் அவர் திடீரென வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், கிரிக்கெட் வட்டாரத்தையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

முத்தையா முரளிதரன் தற்போது ஐதராபாத் சன் ரைசஸ் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

தோனி அவுட்டால் பிரபலமான ரசிகை: இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

கொழும்பு மாநகரசபை, பல யாழ் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!