அரியவகை ஆம்பலை முல்லைத்தீவில் விற்க வந்த நால்வர் சிக்கினர்!

Date:

முல்லைத்தீவில் ஆம்பல் எனப்படும் அரியவகை பொருளுடன் தென்பகுதியினை சேர்ந்த நால்வர் இரண்டு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (19) முல்லைத்தீவு வட்டுவாகல் பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 2 1/2 கிலோ கிராம் நிறையுடைய திமிங்கலத்தின் ஆம்பல் என்ற பொருளுடன் அனுராதபுரம் புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த நால்வர் கைதுசெய்யப்பட்டதுடன் வாகனங்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று காலை 2 கிலோ 500 கிராம் நிறைகொண்ட பெறுமதியான ஆம்பல் எனப்படும் அரியவகையான பொருளினை முல்லைத்தீவில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்கள். வட்டுவாகல் பாலத்தில் வைத்து சிறப்பு அதிரடிப்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதானவர்களும் குறித்த அரியவகை பொருளும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

‘விமானத்தை வீழ்த்த விரும்பினேன்… சாவுக்கு அஞ்சவில்லை’: துணை விமானி ‘பகீர்’!

பெரும்பாலும் இஸ்ரேலியர்களான 170-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானத்தை, கப்டன்...

ஒக்டோபர் இறுதிக்குள் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜெலென்ஸ்கி

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய சுற்றுப்...

பேஸ்புக் நண்பரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பருடன் ஏற்பட்ட தகராறின் போது தடியால் தாக்கப்பட்டதில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்