அட்டன் போடைஸ் பகுதியில் வெள்ளம்: 50 குடும்பங்கள் பாதிப்பு!

Date:

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் நேற்று (17) மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி நேற்று மாலை நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயத்தை நேற்று இரவு மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்