25.4 C
Jaffna
January 23, 2025
Pagetamil
இந்தியா

அனைவருக்கும் நன்றி: விவேக் மனைவி பேட்டி

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி, மத்திய, மாநில அரசுகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், ‘சின்னக் கலைவாணர்’ என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (17) காலை உயிரிழந்தார்.

அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

தற்போது வரை விவேக்கிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், விவேக்கின் மனைவி அருள்செல்வி, அவருடைய மகள்கள் ஆகியோர், சென்னையில் இன்று (18) செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அருள்செல்வி கூறுகையில், “என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில், என் குடும்பத்துக்கு பக்கபலமாகவும் மிகப்பெரும் துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி. என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதனை என்றைக்கும் நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம். இது என் கணவருக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசிவரை நீங்கள் எங்களுடன் நின்றீர்கள். அதற்கு நன்றி. ஊடகத்துறை சகோதரர்களுக்கும் நன்றி. உலகமெங்கும் உள்ள மற்றும் நேற்று வெகுதூரம் என் கணவருடன் கடைசி வரை வந்த அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு என்றும் நன்றி” என தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மகாராஷ்டிராவில் ரயில் விபத்து: 12 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

east tamil

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

Leave a Comment