போலிப் பிக்குவை அடையாளம் காண உதவுங்கள்!

Date:

மீகலாவ – பகுதியில் அமைந்துள்ள விகாரையில் நடமாடிய போலிப் பிக்குவை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஸ்வேர விகாரையில் நடமாடிய பிக்கு ஒருவரில் சந்தேகம் கொண்ட விகாரதிபதி, அவரிடம் விபரங்களை கேட்டு அறிய முயற்சித்த போது குறித்த நபர் கஹல்ல வனப்பகுதிக்குச் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த நபர் ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்காகவே இவ்வாறு மாறு வேடத்தில் வந்திருக்கலாம் என்று கருதப்படுவதால் சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

மேற்படி புகைப்படத்தில் காணப்படும் நபரை அடையாளம் கண்டால் 071-8591287 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மெட்ரோ பேருந்துகளை சேதப்படுத்தும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை

கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'மெட்ரோ' (Metro)...

ரொனால்ட்டோவை இடைநீக்கம் செய்தது போர்ச்சுக்கல் கால்பந்து கூட்டமைப்பு

அணியை விட்டு வெளியேறியதற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு இடைநீக்கம்...

அமெரிக்காவில் வீடொன்றில் 8 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில், இரண்டு குழந்தைகள் உட்பட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்