சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய மணிமண்டப அடிக்கல்!

Date:

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாவிசேகத்தின் 11ஆம் ஆண்டு நினைவாக ஆலயத்தில் மணி மண்டபம் அமைப்பதற்காக அடிக்கல் வைத்தல் மற்றும் ஆறுமுகப் பெருமானின் கோபுர முன் வாயிலில் சரவணப் பொய்கை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுதல் நிகழ்வும் ஆலயத்தின் வன்னிமை பாலச்சந்திரன் தலைமையில் சுபவேளையில் இடம்பெற்றது.அத்துடன் சித்திரவேலாயுத பெருமானுக்கு 108 கலசாபிஷேகமும் சண்முகப் பெருமானுக்கு 108 கலசாபிஷேகமும் இடம் பெற்றது.

கடந்த 50 வருடமாக ஆலயத்தின் நிருவாகிகளாக இருந்து சேவையாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டு ஆலயத்தில் இடம்பெற்ற அடிக்கல் நடும் பூசை நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தனர்.இன்றையதினம் முருகப் பெருமானுக்கு விசேட யாக பூசை இடம்பெற்று கலசபூசை மட்டும் கலசசங்காபிஷேகம் என்பன இடம்பெற்றது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட பலரும் அடிக்கல் நடும் நிகழ்வு கலந்துகொண்டிருந்தனர்.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வுகள் பொதுமக்கள் கலந்து கொண்டு விசேட பூசை பூசை வழிபாடுகளில் ஈடுபட்ட ஈடுபட்டதுடன் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தனர்.அத்துடன் ஆலயத்தின் வன்னிமை பாலச்சந்திரனுக்கு மரபுவழியாக வந்த வன்னிமைக்குறிய முடி சூடுதல் நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்