தன்னுடைய வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகம் மூலம் மகனை இயக்குனராக்கும் நடிகர் ராஜ்கிரண்!

Date:

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்து வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ராஜ்கிரணின் மகன்.

1991 ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’.
30ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ராஜ்கிரணின் மகன்.
90 களின் ஆரம்பத்தில் ராஜ்கிரண், மீனா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. ராஜ்கிரண் திரை வாழ்வில் மறக்க முடியாத படமாக இந்த படம் அமைந்தது. இந்நிலையில் இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ராஜ்கிரண்.

1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்து வெளியான திரைப்படம் ‘என் ராசாவின் மனசிலே’. இந்தப் படத்தில் மீனா, கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்ளிடோர் நடித்திருந்தனர். கிராமத்து பின்னணியில் உருவான இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இசைஞானி இளையராஜா இசையில் மனதை வருடும் பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்த படத்திற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் ராஜ்கிரணின் மார்க்கெட் உயர ஆரம்பித்தது. மீனாவும், வடிவேலும் இந்த திரைப்படத்தில் இருந்து தான் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார்கள். இந்த படத்திற்கு பிறகு ராஜ்கிரணின் பெரும்பாலான திரைப்படங்களில் வடிவேலு இடம்பெற்றார்.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராஜ்கிரண். தனுஷ் இயக்கத்தில் ‘பவர் பாண்டி’ திரைப்படத்தில் ரேவதியுடன் இணைந்து அப்பாவித்தனமான நடிப்பை தனது ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றார். கடைசியாக இவர் நடிப்பில் ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில் ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதை பற்றி தன்னுடைய முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார் ராஜ்கிரண்.

இந்த திரைப்படத்தின் மூலம் வில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் ராஜ்கிரணின் மகன் நைனார் முஹம்மது. இதுகுறித்து நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய முகப்புத்தகத்தில், ‘இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள். ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கை எல் நினோ காலநிலைக்குள் நுழைந்தது

இலங்கை தற்போது எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் கீழ்...

TEEN விபத்துகள் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் கவலை

பதின்ம வயதினரிடையே அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து சுகாதார அதிகாரிகள் தீவிர...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்