கிளிநொச்சியில் கொடூரம்: என்ன சத்தம் என கேட்டவர் அடித்துக் கொல்லப்பட்டார்!

Date:

கிளிநொச்சி சிவபுரம் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பகுதியில் குறித்த சம்பவம் கடந்த 14ம் திகதி இடம்பெற்றள்ளது.

காயமடைந்த குடும்பத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

4 பிள்ளைகளின் தந்தையான மாயழகு மனோகரன் (42) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.

கடந்த 14ம் திகதி சித்திரைப் புத்தாண்டு அன்று இரவு 9 மணியளவில் சிவபுரம்
கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றள்ளது.

இரு நபர்களிற்கிடையில் முரண்பாடு காணப்பட்ட நிலையில் வீதியால் பயணித்த குறித்த நபர் சம்பவ இடத்தில் முரண்பட்டுக்கொண்டிருந்த அவரது உறவினரிடம் என்ன சத்தம் என
வினவியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மோதலில் ஈடுபட்ட நபரொருவர், மனோகரன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும், தாக்குதல் மேற்கொண்டவர் மது போதையில் இருந்ததாகவும் சம்பவத்தை அவதானித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனை அடுத்து தாக்குதலிற்குள்ளான மனோகரனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பயனளிக்காது என தெரிவித்து மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி வைத்தியசாலைக்க மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மனோகரன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள
நிலையில் சடலம் இன்று மாலை குடும்பத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து
வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத மதுபானம் போதைப்பொருள் விற்பனை ஒழித்து தருமாறு கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்)  நீண்டகாலமாக  பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத...

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வீதி ஊர்வலம்!

ஒக்டோபர் 9 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்